அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பலமுறை தப்ப வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனால் தான் இந்தமுறை பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே பின்லேடனை அமெரிக்கப் படைகள் தாங்களே வந்து அழித்தாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரங்களுக்கு இடையிலான ரகசிய கேபிள் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், குவாண்டநாமோ பே சிறையில் உள்ள சிலர் மூலமாகவே பின்லேடனின் புதிய இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறையில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சபீ்ர் லால் மெல்மா என்பவர், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ உதவியோடு பின்லேடனை காபூலில் இருந்து காப்பாற்றி பாகிஸ்தானுக்குள் அழைத்துச் சென்றது குறித்த விவரங்களை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எல்லை வரை அவர்களை தானும் தனது கூட்டாளிகளும் அழைத்துச் சென்றதாகவும், எல்லைப் பகுதியில் அவர்களை ஐஎஸ்ஐ உளவாளிகள் வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஒசாமாவின் இருப்பிடம் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்து அதை பாகிஸ்தான் அரசுடன் பகிர்ந்து கொண்டபோதெல்லாம், ஒசாமைவை ஐஎஸ்ஐ இடம் மாற்றி, காப்பாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் விமான நிலையங்கள் வழியாகக் கூட அல் கொய்தா தலைவர்களை ஐஎஸ்ஐ பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
No comments:
Post a Comment