ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த பாகிஸ்தான் வீட்டில், அவரது அறையில் மூலிகை வயாகரா மருந்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வயாகராவை பின்லேடன் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் மீடியாக்களில் முன்பு வெளியானதைப் போல பின்லேடன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை என்றும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகவும் தெரிகிறது.
54 வயதான பின்லேடனின் 29 வயது மனைவி அமல் அளித்துள்ள பேட்டிகள் மற்றும் அமெரிக்கப் படையினர் கைப்பற்றிய மருந்துகளை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
அமல், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரைக் காப்பாற்ற முயன்று காயப்பட்டார். தற்போது பாகிஸ்தான் படையினரின் வசம் அவர் உள்ளார்.
மேலும் பின்லேடன் மூலிகை மருந்துகளை பெருமளவில் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து என்பிசி செய்தி கூறியுள்ளதாவது...
பின்லேடன் வீட்டில் சிக்கிய மருந்துகள் எதுவுமே பெரிய அளவிலான வியாதிகளுக்கானது அல்ல. சாதாரண மருந்துகள்தான். இதன் மூலம் அவர் நல்ல உடல் நிலையில் இருந்தது தெரிய வருகிறது.
ரத்த அழுத்தம், அல்சர், நரம்பு வலி, சாதாரண குழந்தைகள் மருந்துகள் என்றுதான் அவரது வீட்டில் மருந்துகள் இருந்தன.
மேலும் பின்லேடன் அறையில் அவீனா சிரப்இருந்தது. இது ஓட்ஸிலிருந்து தயாரிக்கப்படும் ஆண்மைக் குறைவைத் தீர்க்கும் மருந்தாகும். இது மூலிகை வயாகரா என்றும் அழைக்கப்படுகிறது.
செக்ஸ் மருந்தாக மட்டுமல்லாமல், வயிற்றுப் புண்ணுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.
இந்த மருந்தை பின்லேடன் வீட்டில் யார் பயன்படுத்தினார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும் பின்லேடனை இதைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என தெரிகிறது.
இந்த நேரத்தில் பின்லேடனுடன் தங்கியிருந்த அவரது 29 வயதான மனைவி அமல் அளித்துள்ள ஒரு பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அவர் கூறுகையில், எனது கணவர் பலவீனமானவராகவும் இல்லை, சோர்ந்தவராகவும் இல்லை என்று கூறியுள்ளார் அமல்.
மேலும் அவர் கூறுகையில், அவரே மருந்துகளைத் தயாரிப்பார். அதைத்தான் அவர் நம்பினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இருந்த சிறுநீரக கோளாறு முழுமையாக சரியாகி விட்டது என்று கூறியுள்ளார் அமல்.
அமலுக்கு 17 வயதாக இருக்கும்போது அவர் பின்லேடனை மணந்துள்ளார். இவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவராவார்.
அமல் மேலும் கூறுகையில், எனது கணவருக்கு டயாலிசிஸ் எல்லாம் நடக்கவில்லை. அவரே சொந்த மருந்துகள் மூலமும், அதிக அளவில் தர்பூஸ் சாப்பிட்டும் குணமாக்கிக் கொண்டார்.
அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்புதான் நானும், எனது கணவரும் விளக்குகளை அணைத்து விட்டு படுக்கைக்குச் சென்றோம். அப்போதுதான் துப்பாக்கி சத்தம் கேட்டது.
எனது கணவர் அருகில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியை எடுப்பதற்குள் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டு விட்டனர் என்றார்.
இந்த தாக்குதலில் அமலுக்கு காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அமல், பின்லேடனின் 5வது மனைவி ஆவார்.
நானும் எனது கணவரும் இந்த வீட்டை விட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே வெளியே வருவதில்லை. கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் இருப்பது போலத்தான் இருந்தோம் என்றும் அமல் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment