ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி. காமேஷ்வர். இவர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வழக்குகளை பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் எதிர்கொண்டு வந்தார்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு எதிரான வழக்கில் செயல்பட்ட, அவர் கடந்த சனிக்கிழமை தான் பாட்னா ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்று இருந்தார். அவர் மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிடவேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான பரம்பரை வீடு டான்சாபர் கிராமத்தில் உள்ளது. காலியாக இருந்த அவரது வீட்டுக்குள் நேற்று மாவோயிஸ்டுகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் வீட்டை வெடிவைத்து தகர்த்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

No comments:
Post a Comment