ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க இருக்கும் படம் ராணா. ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.
இது ஒரு சரித்திர கால படம் என்பதால் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் இருப்பார்கள் என்றும் அவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அறிவித்து இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான 'புரியாத புதிர்' படத்திலிருந்து அவருக்கு நெருங்கிய நண்பராக இருப்பவர் சரத்குமார். இந்த நட்பு 'ராணா' படத்திலும் தொடர்கிறது.
ராணா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு சரத்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரத்குமார் ஜோடியாக சிநேகாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சரத்குமாரும் சிநேகாவும் இப்போது 'விடியல்' என்னும் படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment