இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றமே என்ற ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உலக நாடுகள் மத்தியில் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், திடீரென சீனா அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபட்சேயை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இப்பிரச்னையை இலங்கையிடமே விட்டுவிடுங்கள், பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு அரசே குழு ஒன்றை அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை, உலக நாடுகள் வெளியில் இருந்து செய்தால் போதும் என்றும் ஹாங் அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment