அஜித் நற்பணி இயக்கத்தை கலைக்க சிவகங்கை மாவட்ட ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் தொடங்க கோரி அஜித் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட அஜித்குமார் நற்பணி மன்ற தலைவர் தேவகோட்டை சுப.கார்த்திக்கேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் கவர்ந்தவர் நடிகர் அஜித்குமார். இந்தநிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டதாக நடிகர் அஜித்குமார் தனது 40வது பிறந்தநாளில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர், ரசிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித பலனையும், எதிர்பாராமல் சமூக தொண்டுகளில் அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக தனிமனித ஒழுக்கத்தை அறிவுறுத்தி வந்த அஜித்குமார், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாக வைத்து அஜித்குமார் மன்றமும் அதேபோல் ஆகிவிடுமோ என சந்தேகப்பட தேவையில்லை.
ஏன் எனில் இந்த மன்றத்தில் உள்ளவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நலத்திட்டங்களை செய்து வந்தவர்கள் என்பதை இந்தநாடும் அஜித்குமாரும் அறிந்த ஒன்று இந்த நிலையில் இதுபோல அவர் எடுத்து இருக்கும் முடிவை எங்களது சிவகங்கை மாவட்ட அஜித்
குமார் ரசிகர் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அஜித்குமார் முடிவை மறுபரிசீலனை செய்து நற்பணி இயக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
15 நாட்களில் அஜித் குமார் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். அறிவிக்காத பட்சத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனைத்து ரசிகர்களும் சென்னை சென்று அவரது இல்லத்தை முற்றுகை யிட்டு எங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment