பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் பார்க்க மிகவும் கோரமாக இருப்பதால் அவற்றை வெளியிட்டால் பிரச்சினை வரும் என கருதுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இதையடுத்து உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பின்லேடன் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு உடலையும் கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டானா அல்லது ஒபாமாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அவரது நிர்வாகம் டிராமா போடுகிறதா என்ற கேள்விகள் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன.
இதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதை அமெரிக்கா தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தியபோது அவனிடம் கையில் ஆயுதம் எதுவம் இல்லை. ஆயுதம் இல்லாத நிலையிலும் அமெரிக்க வீரர்களை எதிர்த்து லேசான எதிர்ப்பைக் காட்டினான் பின்லேடன். அதேசமயம், அவன் அவனது மனைவியின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கூறப்படுவதில்லை உண்மை இல்லை. அப்படி அவன் செய்யவில்லை.
மேலும் அமெரிக்க வீரர்கள் தன்னை சுட முயன்றபோது அவர்களை நோக்கி ஓடி வந்தான் பின்லேடன். இதையடுத்து அவனது காலில் வீரர்கள் சுட்டனர். இதனால் அவனால் ஓட முடியவில்லை. இதையடுத்து அவனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
அமெரிக்க வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எதிரில் தென்பட்டவர்களை துப்பாக்கி முனையில் பிடித்து கைவிலங்கிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்களது குறி பின்லேடன் மட்டும்தான் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். எதிர்ப்பட்டவர்களை எல்லாம் சுடும் நோக்கத்தில் அவர்கள் இல்லை. அமெரிக்க வீரர்கள் வந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதுபட்டு விட்டது.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்கள் பழுதடைந்திருந்த ஹெலிகாப்டரை தகர்த்து எரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் கோரமாக உள்ளது. அவற்ற வெளியிட்டால் பிரச்சினை வரலாம் என கருதுகிறோம். எனவே அவற்றை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்த பிறகே முடிவெடுக்கப்படும். பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவது குறித்து தீவிரப் பரிசீலனை நடந்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment