முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படத் தலைப்புகளில் அவர்களின் பெயரை இடம் பெற செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆர்யாவின் மதராசப்பட்டினம் மாதிரி, எஸ்.டி.ஆரின் வானம் மாதிரி இது இன்றியமையாத இமேஜ் ஆகிவிட்டது. ஆனால் படத்தின் தலைப்பிலேயே ஒரு நடிகரின் பெயர் வருகிறது என்றால் அதுதான் ஆச்சர்யம். இந்த ஆச்சர்யம் காலம் தந்த கட்டாயமாகியிருக்கிறது விக்ரமுக்கு.
இவர் நடிக்கும் தெய்வ திருமகன் படத் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. கடந்த சில வாரங்களாகவே இந்த தலைப்புச் சிக்கலால் அல்லாடிக் கொண்டிருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். படத் தலைப்பை மாற்றியே தீர வேண்டும் என்று உறுதியாக நின்றன ஜாதி அமைப்புகள். இந்த நிலையில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் வந்து தலைப்பை மாற்றும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இரு தரப்பையும் அழைத்துப் பேசிய சங்கம், விக்ரமனின் தெய்வ திருமகன் என்று பெயர் மாற்றியது. இதற்கு தயாரிப்பாளர் மோகன் நடராஜனும் ஒப்புக் கொண்டார். ஒரு பெரும் பிரச்சனை இத்துடன் தீர்த்து வைக்கப்பட்ட நிம்மதி அனைவருக்கும். படமும் ஹிட் என்ற தகவல் வந்தால் இன்னொரு நிம்மதியும் கிடைக்கும் தயாரிப்பாளருக்கு!
No comments:
Post a Comment