ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது.
போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங்கி தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர் போன்ற விஷயங்களையும் அவர் இணையதளம் மூலம் தனது நட்பு வட்டாரத்தில் பரவவிட்டது
ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு தெரியவரதே, அவர் கழற்றி விடப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஒருவர், நடன அழகிகளுக்கு பறக்கும் முத்தமிட்டதுடன், உங்களை கட்டித்தழுவ ஆசையாக இருக்கிறது. எனது அறைக்கு வாருங்கள் என்று அழைத்ததாக கேப்ரியலா ஒரு தகவலில் கூறியுள்ளார்.
அதே சமயம் சில இந்திய வீரர்களை அவர் பாராட்டியுள்ளார். டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் அமைதியாகவும், இது போன்ற விஷயங்களில் விலகி இருப்பார்கள் என்றும், தெண்டுல்கர் இவற்றில் கலந்து கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
வேலை போனது குறித்து கேப்ரியலா கூறும் போது, `நான் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. எந்த குறிப்பிட்ட வீரரின் பெயரையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை. பொதுவாகவே எழுதினேன். இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் எனது வருமானம் பறிபோயிருக்கிறது' என்றார்.

No comments:
Post a Comment