வெயில் பிரியங்காவை நினைவிருக்கிறதா? (நமக்கே வெயில் காலத்தில்தான் நினைவுக்கு வருகிறார்) அதன்பின் ஏதேதோ படங்களில் நடித்திருந்தாலும், முதல் படமும் அந்த அழகும் இன்னும் ரெண்டு கண்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
ஆறுதலாக ரெண்டு வார்த்தை பேசிவிட்டால் அப்படியே மடியில் படுத்துக் கொள்கிற நடிகைகளும் உண்டு. மடக்கப் பார்க்குறீயா என்று இஞ்சி மரபா கொடுக்கிறவர்களும் உண்டு. பிரியங்கா முதல் ரகம் போலிருக்கிறது. செங்காத்து பூமியிலே என்ற படத்தில் இவர்தான் நாயகி. கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற முக்கியமான படங்களின் வசனகர்த்தவான ரத்னகுமார் இயக்கி வரும் படம் இது.
இவரது உதவியாளர் ஒருவருக்கும் பிரியங்காவுக்கும் படப்பிடிப்பில் காதல் உருவாகிவிட்டதாம். அதன்பின் கள்ளப்பார்வை, கவனச்சிதறல் என்றாகி கரெக்டாக சிக்கிக் கொண்டார்கள் இருவரும். ஓடிப்போ என்று பிரியங்காவை துரத்த முடியாது. ஆனால் உதவியாளரை முடியுமே? அதைதான் செய்தார் ரத்னகுமார்.
படத்திலிருந்து வெளியேறினாலும் இருவருக்குமான லவ் இன்னும் தொடர்கிறதாம். வேடிக்கை என்னவென்றால் விரட்டி விட்ட டைரக்டருக்கே இருவரும் சேர்ந்து தண்ணி காட்டுகிறார்களாம்.

No comments:
Post a Comment