அல்-காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் தனது பாதுகாவலர் ஒருவரால் சுடப்பட்டிருக்காலம் என்கிற ரீதியில், பாகிஸ்தானின் பத்திரிகை செய்தி வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் 5 ஆண்டு காலமாக பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்.
தங்களது சிறப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஒசாமா என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அபோதாபாத்தில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சண்டை குறித்து அமெரிக்க அதிகாரிகள் விவரித்தனர்.
ஒரு பெண்மணியை மனித கேடயமாக வைக்க முயன்ற ஒசாமாவை தங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டான் (dawn) நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்று, ஒசாமாவை சுட்டது அமெரிக்கப் படைதானா என்ற சந்தேகத்தை ஆழமாக எழுப்பியுள்ளது. (அந்தச் செய்தி: Was Osama killed by US troops or his own guard? )
அமெரிக்க சிறப்புப் படையினர் ஹெலிகாப்டரில் வந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்திய அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்தைப் பார்த்த அதிகாரி ஒருவர் சொன்ன விஷயங்களின் அடிப்படையில் அந்தச் செய்தியில் அலசப்பட்டுள்ளது.
தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த பாகிஸ்தான் அதிகாரி, "துப்பாக்கிச் சண்டை நடந்தச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், ஒசாமாவை மிக நெருக்கமாகச் சென்று, அவரது தலையில் ஒற்றைத் தோட்டாவால் சுட்டு வீழ்த்தியிருக்க சாத்தியமில்லை.
தங்களால் தப்பமுடியாத சூழலை உணர்ந்து, ஒசாமாவே தனது பாதுகாவலரைக் கொண்டு துப்பாக்கியால் சுட வைத்திருக்கக் கூடும்,' என்று அந்த அதிகாரி விவரித்ததாக டான் செய்தி கூறுகிறது.
ஒசாமாவின் பாதுகாவலர்கள் மூவரும் சுட்டு வீழ்த்தப்பட, பின் லேடனின் உடலை மட்டும் கைப்பற்றிச் சென்றிருக்கிறது, அமெரிக்கப் படை.
ஒசாமா பின் லேடன் சடலத்தின் படங்களையோ அல்லது வீடியோவை அமெரிக்க இன்னும் வெளியாகாத நிலையில், பாகிஸ்தானின் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment