நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் பற்றி ஒரு தவறான வதந்தி பரவி உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கண்ணீரும் வேதனையை தெரிவித்து வந்தனர்.
ஆனால் இந்த செய்தி வெறும் வதந்தி என்று லதா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரஜினி மனைவி லதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இன்று எனது கணவர் உடல் நிலை குறித்து தவறான செய்தி பரவி உள்ளது. அன்பான உங்கள் எல்லோருடைய பிராத்தனையாலும் என் கணவர் ரஜினி நலமாக உள்ளார்.
ரஜினி ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உலகமெங்கும் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் ரஜினி நலமாக உள்ளார். அன்பிற்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment