நடிகரும், மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் தொண்டையில் ஏற்பட்ட கேன்சர் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று மிகவும் அவதிப்பட்டதால் அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
திருச்சி துரைசாமிபுரத்தைச்சேர்ந்த அலெக்ஸ், ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பின்னர் சினிமா, மேஜிக் என்று பிரபலம் ஆகிவிட்டார்.
வள்ளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அலெக்ஸ், மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலெட்சுமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணசித்தர நடிகர் என்று மாறுபட்ட வேடங்களில் நடித்த அலெக்ஸ் தமிழக அரசின் சிறந்த வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் விருது பெற்றுள்ளார்.
நடிகர் அலெக்ஸ் கடந்த ஆண்டு திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
மேலும் மனதை அறிதல், மனோவசியம் கலையை 12 மணி நேரம் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து நடத்தி சாதனை புரிந்ததற்காகவும், குழந்தைகள் தின விழாவில் 6,000 மாணவர்கள் முன்னிலையில் 8 மணிநேரம் மேஜிக் நடத்தியதற்காகவும் அலெக்ஸ் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.
இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 600 டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் மனதை அறிதல் மற்றும் மேஜிக் பற்றி விளக்கினார். புதிதாக அவர் கண்டுபிடித்த மேஜிக்குகளையும் அவர் நிகழ்த்திக் காட்டினார்.
இவற்றைப் பாராட்டி இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அலெக்ஸுக்கு 2004ம் ஆண்டுக்கான ஆல்பிரட் நோபல் பரிசு வழங்கியது.
அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
நடிப்பு, மேஜிக் மட்டுமல்லாது கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம், நாட்டியநாடகம் என்று பல துறைகளில் சாதனை படைத்துவரும் அலெக்சுக்கு மேலும் கவுரவம் கிடைத்திருக்கிறது. ஐயக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் அவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டை சேர்ந்த டாக்டர் ரெமி ஹமாடெக் விருதை வழங்கினார்.
தனது திறமைகள் மூலம் மேலும் பல விருதுகள் குவித்த அலெக்ஸ் மரணம் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேஜிக்கும் நடிப்பும் ஒருசேரத்தெரிந்த அலெக்ஸ் ஆசிரமம் ஆரம்பித்திருந்தால் எங்கேயோ போயிருக்கலாம்...ம்...ம்.உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அநுதாபங்கள்..
ReplyDeleteஆமாம் நண்பரே ! இன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரராக கூட ஆகியிருக்கலாம். பொழைக்க தெரியல்ல போங்க ...
ReplyDelete