மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்ட அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டு ஒன்றில் 7 பெண் நோயாளிகளுக்கு வழக்கமான மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் 6-ம் எண் வார்டில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. பினாயில் வழங்கப்பட்ட அனைவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் விரைவில் வீடு திரும்ப இருந்தனர்.
மருந்துக்கு பதிலாக பினாயில் வழங்கப்பட்டுள்ளதை வாசனை மூலம் உணர்ந்த வைஷாலி என்ற பெண், இது குறித்து மருத்துவமனை ஊழியரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் காட்கி நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸ் கமிஷனருக்கும் அவர்கள் இது குறித்து தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் பெண் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்தின்(பினாயிலின்) மாதிரிகளை சேகரித்தனர்.
பினாயில் வழங்கப்பட்ட பெண்கள் அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமூகத்தில் விழிப்புணர்வு தரும் பதிவு!
ReplyDelete