அரசியலை விட்டு ஜெயலலிதா விலகினால்தான் நாடு உருப்படும் என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணி உடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி,
அதிமுக வேட்பாளர்களின் பட்டியலைக் கூட ஜெயலலிதாவால் சுயமாக தயாரிக்க முடியவில்லை. அதைக்கூட சசிகலாவிடம் விட்டுவிட்ட ஜெயலலிதா, நாட்டின் நலனுக்காக அரசியலைவிட்டே
விலக வேண்டும்.
அரசியலை விட்டு ஜெயலலிதா விலகினால்தான் நாடு உருப்படும். தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணி உடையும். குறிப்பாக விஜயகாந்த் அந்த கூட்டணியில் இருந்து விலகுவார்.
தேர்தலுக்கு முன்னர் திமுக கூட்டணி தோற்கும் என பலரும் சொன்னார்கள். ஆனால் தற்போது திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.

No comments:
Post a Comment