நான் மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பேன்; அதனால் மேக்-அப் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்று நடிகை அமோகா அலைஸ் பிரியங்கா கோத்தாரி கூறியுள்ளார். ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமோகா. அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போன இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் மேக்-அப் இல்லாமலேயே அழகாக இருப்பதாக சில டைரக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் அப்படியே நம்புகிறேன். இருந்தாலும் குறைந்த அளவு மேக்-அப்புடன் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் மடோனாவை பின்பற்ற நினைக்கிறேன். தன் வயதுக்கேற்ற வகையில் அவர் எப்போதும் அழகான மேக்-அப்புடன் இருப்பார். அது எனக்கு பிடிக்கும். மேக்-அப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக என் மனதில் குடிகொண்டிருக்கிறது, என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment