தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின், நடிப்பிற்கு முழுக்கு போடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜீத், மாதவன், விஷால் உள்ளிட்டவர்களுடன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ்மினுக்கு, சமீபத்திய படங்கள் அனைத்தும் ஊத்திக் கொண்டது. தமிழில் கடைசியாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு நடித்த படங்கள் எதுவும் சொல்லும்படியாக இல்லை. தமிழில் தான் இப்படி என்றால், மலையாள படங்களும் அவருக்கு தோல்வி படங்களாக அமைந்தது. இப்படி படங்கள் அனைத்தும் தொடர் தோல்வி அடைவதால் நடிப்பிற்கு முழுக்கு போடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.
இதனிடையே மீரா, நடிப்பிற்கு முழுக்கு போட தொடர் படங்களின் தோல்வி மட்டும் காரணமல்ல, விரைவில் அவர் தன்னுடைய நீண்டகால நண்பரை திருமணம் செய்ய இருப்பதால் நடிப்பிற்கு முழுக்கு போட இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

நல்ல நடிகை.. இன்னும் நடிக்கலாம்.
ReplyDelete