ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.
பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.
அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது.
பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.
இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் கையாளப்பட்டதாகவும், உடல் அடக்கம் நடந்ததாகவும். அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் விளக்கம் தரவில்லை.
உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடலாம் என்பதால் அதைத் தவிர்க்கவே கடலில் உடலை வீசியதாக தெரிகிறது. கடலில் எந்த இடத்தில் உடல் வீசப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இதனால் உடல் உண்மையிலேயே கடலில் தான் வீசப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment