சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மகதீரா.
இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகிறது.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை கலைப்புலி தாணு வாங்கி, கே பாக்யராஜை வசனம் எழுத வைத்து டப் செய்தார். பின்னர் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி நல்ல விலைக்கு வாங்கினார். படத்தின் விளம்பரங்கள், ட்ரெயிலர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வழங்கும் என்று போடப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட்ஜெயன்ட் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கீதா ஆர்ட்ஸ், அல்லு அரவிந்த் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்கையில், படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனமே நேரடியாக மே 27-ம் தேதி வெளியிடுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ரெட் ஜெயன்ட் பெயர் இல்லாமல் வருவதுதான் இப்போதைக்கு ஸேஃப் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது, சிரஞ்சீவி தரப்பில்.
No comments:
Post a Comment