ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இன்று டெல்லி சிபிஐ கோர்ட் கனிமொழிக்கும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கும் ஜாமின் மறுத்தது.
மேலும் சிபிஐ உத்தரவுப்படி கனிமொழி எம்.பியும், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி, சட்ட வல்லுநர்களைக்கொண்டு சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வோம் என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கலைஞர் அழைத்ததால் மதுரையில் இரவு 7 மணிக்கு விமானத்தில் ஏறினார்.
இன்று இரவு சென்னையில் கலைஞருடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
அங்கு கனிமொழியை ஜாமீனில் எடுப்பது விசயமாக முயற்சிகள் மேற்கொள்வார் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment