நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டி திருவந்திபுரம் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்திய ரசிகர்கள் கோவில் பிரசாதத்தை ரஜினிகாந்திற்கு அனுப்பி வைத்தனர்.
நடுநாட்டு திருப்பதிகளில் முக்கிய திருத்தலமான கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் அருள்மிகு தேவநாதசுவாமி கோவில் ரஜினி குடும்பத்தினர் விருப்பமுடன் வழிபடும் கோவிலாகும். இதன் காரணமாகவே ரஜினி ரசிகர்களின் வழிபாட்டு தலமாகவும் இக்கோவில் மாறியது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட மாநகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் நேற்று திருவந்திபுரம் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
அருள்மிகு தேவநாதசுவாமி, அருள்மிகு செங்கமலவல்லிதாயார் சன்னிதிகளில் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து அவர் விரைவில் நலம் பெற வேண்டி வழிபட்டனர்.
மாவட்டச் செயலாளர் ரஜனிபிரபாகர், மாவட்டப் பொருளாளர் ரஜினிமூர்த்தி, இணைச்செயலாளர்கள் ராஜ்குமார், ரஜனிசுந்தர், நெல்லிக்குப்பம் அமீது, கடலூர் துறைமுகம் ரஜினிராஜா, பிரேம், தேவா, ரமேஷ், சௌந்தர், அருள்பிரகாஷ், ராஜேந்திரன், திருநாவுக்கரசு, ஜீவா, சத்யா, குறிஞ்சிப்பாடி மரியபிள்ளை, சீனு, ஜெயவேல், காமராஜ், செல்வம் , கார்த்திக், வேலவன், கலைக்குமரன், ராகவன், வெங்கடேசன், சென்னி, குணசேகரன், தேவா, பாலமுருகன் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.
கோவில் பிரசாதத்தை நேரில் கொண்டுச் சென்று லதா ரஜனிகாந்திடம் அளிக்க விருப்பதாக மாவட்டத் தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ரஜினிபிரபாகர் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment