இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,
தமிழகத்தில் இனிமேல் காங்கிரஸ் கட்சி வளரவே முடியாது. சீமான் என்கிற ஒருவன் இருக்கும்
வரையில் காங்கிரஸ் தமிழகத்தில் வளர முடியாது. காங்கிரஸ் கட்சியால்தான் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாமக ஆகியவை தேர்தலில் தோல்வி அடைந்தன. இதை யாராலும் மறுக்க முடியாது.
ராகுல்காந்தி பிரதமராகும் கனவில் இருக்கிறார். அவர் பிரதமராக முடியாது. சீமான் கேட்டதையெல்லாம் ராகுல்காந்தி செய்தால்தான் காங்கிரஸ் வளரும் என்றார்.

No comments:
Post a Comment