4 பெண்களை காதலித்து தோல்வி அடைந்துவிட்டேன், என்னால் நல்ல கணவனாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது என்று இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.
46 வயதாகும் சல்மான் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடன் அறிமுகமான ஷாருக் கான் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார். அமீர் கான் முதல் திருமணத்தை முறித்துக் கொண்டு இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.
ஆனால், சல்மான் கான் ஐஸ்வர்யா ராய், கேத்ரீனா கைப், உள்ளிட்டோரை காதலித்தார்.
பின்னர் அந்தக் காதல்களும் தோல்வியில் முடிந்தன. இப்போது ஆசின், கங்கனா, சோனாக்ஷி ஆகியோருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் சல்மான்.
மான் வேட்டை, அடிதடி, கோர்ட், சிறை வாழ்க்கை, மிரட்டல், மோதல் என பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் சல்மான் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார். அனாதை இல்லங்களுக்கு இவர் பெருமளவில் உதவிகள் செய்து வருகிறார்.
ஆனாலும் அவருக்கு இதுவரை திருமணம் கைகூடவில்லை. இந் நிலையில் திருமணம் குறித்து சல்மான் கூறுகையில், நான் ரொம்ப கஷ்டமான பேர்வழி. என்னோடு யாரும் நிரந்தரமாக இருக்க முடியாது. என் குணாதிசயம் அப்படி.
இதுவரை நான்கு பெண்களை காதலித்து இருக்கிறேன். அவர்கள் பார்க்க மட்டும் அழகானவர்கள் அல்ல. மனதளவிலும் நல்லவர்கள். ஆனால், அவர்களுடனான உறவைக் கூட என்னால் நீடிக்க முடியவில்லை.
என் காதல்கள் தோற்றதற்கு முழு பொறுப்பும் நான்தான். எனது தவறுகளால் தான் அவை முறிந்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது.
இதனால் நான் திருமணத்தை பற்றி யோசிப்பதைக் கூட விட்டுவிட்டேன். இதனால் கல்யாணம் எப்போது என்று கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
அதே நேரத்தில் நான் இன்னும் காதலிப்பதை விட்டுவிடவில்லை... என் வயதில் பாதி வயதில் உள்ள சிலரை நான் இன்னும் காதலித்துக் கொண்டு தானே இருக்கிறேன் என்றார்.
உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeleteShare