சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 22 ஆண்டுகளாக ஜொலித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர். இதுவரை 183 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களுடன் 15,086 ரன்களும், 453 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 48 சதங்களுடன் 18,111 ரன்களும் குவித்துள்ளார்.
இன்னும் ஒரு சதம் அடித்தால் 100 சர்வதேச சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மும்பையை சேர்ந்தவரான தெண்டுல்கர் பெறுவார்.
இந்நிலையில், தனது சொந்த மண்ணில் 100-வது சதத்தை அடித்தால் தெண்டுல்கருக்கு 100 தங்க காசுகள் பரிசாக வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment