1996 ஆம் ஆண்டு தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்த சுக்ராம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் சுக்ராம் தனக்கு 85 வயதாகிறது. எனவே வயதை கருத்தில் கொண்டு கருணைகாட்டும் படி கோரிக்கை விடுத்தார். இதற்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் நான்கு லட்சம் அபராதமும் விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த சுக்ராம் நபர் ஒருவரால் அடித்து உதைக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் அந்நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment