ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. படகுகளும் சேதமடைந்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து 650 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 16க்கும் மேற்பட்ட அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த மீன்களையும், வலைகள், கருவிகளையும் பறித்துச் சென்றனர்.
கடற்படை தாக்கியதில் செல்வராஜ் என்ற மீனவரின் மண்டை உடைந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பும் போது மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினர், மற்றும் மீனவர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் தாக்குதலினால் படுகாயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தினந்தோறும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு மலேசியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே,தமிழக மீனவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்த நிலையில் தற்போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் வேற ஒரு அரசியல் தந்திரமும் பண்ணலாமே எப்பட்டின்னா...இப்போ ஒட்டு மொத்த தமிழக அரசியல் தலைவர்களும் கையில் எடுத்திருக்கும் பிரச்சனை கூடங்குளம் அணுமின் நிலையம் விவகாரம் தான், இது தான் இன்று தமிழ் நாட்டு மக்களும் பேசும் ஒரே விஷயம்.இதை அடக்க மத்திய அரசும் எவ்வளவோ செய்து பார்த்து விட்டது. ஆனால், பலன் தான் இல்லை. இதை கையில் எடுத்திருக்கும் தமிழக மீனவர்களையும், அரசியல்வதிகளையும் திசை திருப்ப வேண்டும் என்றால், இதற்க்கு இணையான வேறு ஒரு பிரச்னையை உருவாக்க வேண்டும். அதனால் ஒரு வேளை கடந்த சில தினங்களுக்கு மலேசியாவில் ராஜபக்சேவை சந்தித்த நம்ம பிரதமர் தான் ராஜபக்சேவிடம் சொல்லியிருப்பாரோ ' இவனுங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுங்க மானம், ரோசம், சூடு, சொரணை இல்லாத ரெம்ப நல்ல பசங்க'ன்னு ...
கொலைக்கார திருட்டு பசங்க எதை வேணும்னாலும் பண்ணுவாங்க....

//கொலைக்கார திருட்டு பசங்க எதை வேணும்னாலும் பண்ணுவாங்க....//
ReplyDeleteநம்ம மாநில , மத்திய அரசும் பொத்திகிட்டு இருக்கும்