அக்னிபத் இந்திப் படத்தை பார்த்து, ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்ய கற்றுக்கொண்டேன். தமிழகத்தையே உலுக்கி எடுத்த ஆசிரியை கொலை வழக்கில் கைதான 9-ம் வகுப்பு மாணவன் அளித்த வாக்குமூலம் இது.
பருத்தி வீரன் சினிமாவில் பெண் சாராய வியாபாரியின் முகத்தை சாக்கு பையில் மூடி கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியை பார்த்தோம். அதைப் போலவே மகளிர் குழு தலைவியை துடிக்க துடிக்க கொன்றோம். மாங்காட்டில் கடந்த மாதம் நடந்த சுய உதவி குழு பெண் அம்பிகா கொலையில் கைதான கொலையாளிகள் இப்படி வாக்குமூலம் அளித்தனர்.
அந்த படத்தை பார்த்து கொலை செய்தோம். இந்த படத்தை பார்த்து கொலைக்கு சதி திட்டம் தீட்டினோம். என கொலை வழக்குகளில் கைதாகும் வாலிபர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒரு காலத்தில் துளியும் வன்முறையின்றியே சினிமா படங்கள் எடுக்கப்பட்டன. அந்த படங்களில் கருத்துள்ள பாடல்களும் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம்பெறும் பாடல்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கும்.
சின்ன பயலே... சின்ன பயலே... சேதி கேளடா? என்பது போன்ற ஏராளமான பாடல்களை அதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் இன்று... வெளிவரும் சினிமா படங்களில் வன்முறை மற்றும் பாலியல் உணர்வை தூண்டும் காட்சிகளே நிரம் பிக்கிடக்கின்றன. சினிமா மூலமாக சொல்லப்படும் கருத்துக்கள் எளிதாக மக்களை சென்றடைந்து விடுவதால், இதுபோன்ற காட்சிகளே பார்க்கும் குழந்தைகளின் மனதில் அது ஆழமாக பதிந்து விடுகிறது. அதுவே அவர்களை தவறான பாதைக்கும் இழுத்துச் செல்கிறது என்றால் அது மிகையாகாது.
இதே போல் தொலைக்காட்சி தொடர்களிலும் கொலை- கடத்தல் போன்ற காட்சிகளே அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதுபோன்று வன்முறையை தூண்டும் காட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக தடைவிதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை சினிமாக்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
ஆசிரியரை கொன்ற மாணவன் கொலைக்காக பல காரணங்களை கூறினாலும் அவன் அந்த ஆசிரியரை கொல்ல வேண்டும் என்று தான் குத்தி இருக்கிறான். பதினான்கு இடங்களில் கத்தி குத்து இருக்கிறதாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது. பதினான்கு இடத்தில் குத்தி இருக்கிறான் என்றால் அந்த ஆசிரியை சாக வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் பிழைத்து விட கூடாது என்று தான் அந்த கொலைகார சிறுவன் நினைத்து செய்திருக்கிறான்.
இந்நிலையில் காவல் துறையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த மாணவன் ஸ்மாயில் (பெயர் மாற்றப்பட்டுள்ளதாம் யாருக்கும் தெரிய கூடாதாம் கொடுமைடா சாமி) நலமாக உள்ளான். அவனது சொந்தகாரர்கள் எப்போது வேண்டுமானாலும் அவன்னை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாடுகிறான், டிவி பார்கிறான், இன்று காலையில் உப்புமா சாபிட்டான், அவனுக்கு மேற்கொண்டு படிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும், தமிழ் .ஆங்கிலம் தெரிந்த இரண்டு ஆசிரியர்கள் (யப்பா ...திட்டாத அடிக்காத பாடங்கள் தோல்வி அடைந்தால் கூட ஆமாடா ராசா அடுத்த தடவையும் இப்படித்தான் தோல்வி அடையணும் என்று பாராடுற ஆசிரியர நியமிங்கபா) அவனுக்கென தனியாக நியமித்து அவனுக்கு நல்ல கல்வி கொடுக்கப்படும், அவன் சந்தோசமாக கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று பெண் காவலர்கள் அவனுடன் சகஜமாக பேசி அவனை சந்தோசமாக வைத்திருகிறார்கள். அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. அவனும் சந்தோசமாக இருக்கிறான் . தண்டனை என்று வந்தால் மூன்று ஆண்டுகள் தான் கொடுக்க முடியும். அதிகபட்ச தண்டனை என்று வந்தால் ஆறு வருடம் கொடுக்கலாம் அதற்கு மேல் தண்டனை கொடுக்க சட்டத்தில் இடமில்லை. இப்படி எல்லாம் அறிவிச்சிருக்காங்க....!
இதை படிக்கும் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் குடும்பத்தாருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க முடிகிறதா.....அந்த இடத்தில் நம்மை வைத்து நினைத்து பாருங்கள் அப்போது தெரியும் அவர்கள் வலி.....அதை விடுவோம் இதை படிக்கும் மற்ற மாணவர்களுக்கு என்ன தோன்றும் ...ஆசிரியரை கொலை செய்தவனுக்கு ராஜமரியாதை கொடுகான்களே என்று தோன்றாதா....! தண்டனைகள் குறைவு என்னும் போது தப்பு செய்ய தோன்றாதா....? ஏன் சிறுவர்களுக்கு தீவிரவாத எண்ணத்தை ஊட்டி அவர்களிட உங்களுக்கு தண்டனை கூட ஒரு மூன்று வருடம் தான் கிடைக்கும் என்று நம்ப வைத்து தீவிரவாத செயல்களுக்கு ஈடுப்படுத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டமாட்டார்களா...? பெரியவர்கள் மீது உள்ள பகையை தீர்த்து கொள்ள இதைபோன்ற சிறுவர்களை பயன்படுத்த மாட்டார்களா....?
சினிமாத்துறை வளர்ந்து விட்டதாக பெருமை பாராட்டும் தமிழ் சினிமாத்துறை,அது எந்தத் துறையில் வளர்ந்துள்ளது என்று முதலில் சொல்லட்டும். மக்கள் விரும்பியதை கொடுப்பதாக கூறும் சினிமா கூட்டம் மக்களுக்கு தேவையானதைக் கொடுக்க வேண்டும். கொலை,பலாத்காரம்,கடத்தல் கற்பளிப்பை சொல்லிக் கொடுக்கும் சினிமா இது தான் மக்கள் விரும்பியதை கொடுப்பதா? சென்ற சினிமா விழாவின் போது பாலசந்தர் உட்பட பேசிக் கொண்டது தமிழக சினிமா பெருமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது தான்.எவற்றில் பெருமைப்பட போகிறார்கள்.பணமும் விருதும் புகழும் கிடைப்பதற்கா? புகைத்தலும்,மதுவும் இல்லாமல் சினிமா எடுக்க முடியாதா?
ReplyDelete