நில மோசடி புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் நடராஜன் அவரது பெசன்ட் நகர் வீட்டில் கைது செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்றிய இவர், சசிகலாவின் கணவர் என்பதால் குறுகிய காலத்தில் முன்னேறினார்.
இவர் மீது தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தை சேர்ந்த ராம லிங்கம் என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் சதுர அடி முந்திரி தோப்பை நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு
கட்டிக்கொண்டனர். நிலத்தையும் தரும்படி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தஞ்சை எஸ்.பி. அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு போலீசார், நடரா ஜனை தேடிவந்தனர். அவர் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த தஞ்சை நிலஅபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. கண்ணகி தலைமையிலான போலீஸ்படை, இரவு 7.30 மணிக்கு சென்னை வந்து நடராஜனை கைது செய்தது . பலத்த பாதுகாப்புடன் அவரை போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அவரிடம், திருவாரூர் எஸ்பி சேவியர் தன்ராஜ், டிஎஸ்பி மாணிக்கவாசகம் ஆகியோர் விசாரணை நடத்தினர். பல்வேறு மோசடி வழக்குகளில் சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர் ராவணன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுளனர்.
No comments:
Post a Comment