இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு வந்துள்ள புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே. இன்னும் 10 வாரங்களில் அவர் பயிற்சிக்குத் திரும்பலாம் என்று இந்திய டாக்டர்கள் கூறியுள்ளனர்.
யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் வந்துள்ளது என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு வந்துள்ள புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் இந்திய டாக்டர் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் நிதேஷ் ரோஹத்தி, யுவராஜுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களில் ஒருவராவார். யுவராஜ் குறித்து அவர் கூறுகையில், இது குணப்படுத்தக் கூடியதுதான். தெரப்பி கொடுப்பது அவசியம். இதனால் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் நீண்ட கால பாதிப்பு ஏதும் ஏற்படாது.
மேலும் இது மீடியாக்களில் வந்துள்ளதைப் போல நுரையீரல் புற்றுநோய் அல்ல. இரண்டு நுரையீரல்களுக்கும் நடுவில் வந்துள்ள புற்றுநோயாகும். மேலும், இது அரிய வகை புற்றுநோய். இருப்பினும் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான்.
இந்த நிலையிலிருந்து நிச்சயம் யுவராஜால் மீள முடியும். விரைவில் அதாவது இன்னும் 10 வாரத்தில் அவரால் கிரிக்கெட் பயிற்சிக்குத் திரும்ப முடியும் என நான் திடமாக நம்புகிறேன். மே மாதத்தில் அவர் மீண்டும் பயிற்சிக்குத் திரும்ப முடியும் என நம்புகிறேன் என்றார் அவர்.
தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் யுவராஜ் சிங். அவருக்கு 9 வார கீமோதெரப்பி கொடுக்கப்படுகிறது. அதில் தற்போது 2 வாரங்கள் முடிந்துள்ளன. 3வது வார சிகிச்சை தொடங்கி நடந்து வருகிறது.
No comments:
Post a Comment