தமிழகத்தில் தினமும் 7 மணி நேர மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரம் என்பதால் பாடங்களை படிக்க முடியாமல் மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற பகுதியில் பகல் நேரத்தில் 4 மணி நேரம், இரவு நேரத்தில் 3 மணி நேரம் என தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் பணிகள் கடு்மையாக பாதிக்கப்படுகின்றன. இது போன்ற வீடுகளில் காலை 8 மணிக்குள் டிபன், மதிய சாப்பாடு ஆகியவற்றை தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது. மின்சாரம் எப்போது போகும், வரும் என தெரியாத நிலை உள்ளதால் அவர்கள் அதிகாலை 4 மணி முதலே தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் தற்போது பிளஸ் டூ செய்முறை தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதே போல மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கின்றன. தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் மாணவர்கள் இரவு பகல் பாராது தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு மும்முரமாக படித்து வருகின்றனர். இரவு நேர மின்தடை, அதிகாலை மாயமாகும் மின்சாரத்தால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்வை சரிவர எழுத முடியாமல் அவர்களது மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment