ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ10 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து வீர் பிராண்டன் மெக்கலமை கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி முதலில் ஏலம் எடுத்தது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜடேஜா ரூ.9.72 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஐ.பி.எல். ஏலப் போட்டியில் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ஜடேஜா இருக்கக் கூடும்..
சௌராஷ்டிராவைச் சேர்ந்த 23 வயது ஜடேஜாவை ஏலம் எடுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெக்கான் சார்ஜஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. கடந்த தொடரில், இவர் கொச்சி டஸ்கர்ஸ் அணியில் விளையாடினார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது
இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் ஜெயவர்த்தனவை கொச்சி அணி ரூ6.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்திய அணியின் புதிய வரவான வினய்குமாரை ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி ரூ10 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதால் அவர் விலை போயிருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்கை மும்பை அணி வாங்கியுள்ளது.
அண்ட்ரே ரஸுல்லை டெல்லி அணியும் மிச்சைல் ஜான்சனை மும்பை அணியும் விலைக்கு எடுத்துள்ளது.
பார்திவ் படேலை டெக்கான் ஜார்ஜஸ் அணி கடும் போட்டிக்கு இடையேயும் பிரெட்லியை ராஜஸ்தான் அணியும் ஏலம் எடுத்தது.
இருப்பினும் கடந்த முறை ஏலம் போன வி.வி.எஸ். லஷ்மணனை இன்று யாரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை.ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளில் லஷ்மணன் மிக மோசமாக விளையாடியதே இதற்குக் காரணம்.
மொத்தம் 144 வீரர்கள் தற்போதைய ஏலத்தில் இடம்பிடித்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment