இலங்கையில், விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது, உள்ளூர் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. சிங்களர்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகளை தேர்வு செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, கிளிநொச்சியில் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. ஜுலை மாதத்துக்குள், ஆயிரம் பேர் இப்படைக்கு தேர்வு செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளுடனான சண்டை முடிவடைந்த பிறகு, பிடிபட்ட விடுதலைப்புலிகள், இலங்கை அரசின் மறுவாழ்வு திட்ட முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே இப்படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment