இந்த வருடம் என்ஜினீயரிங் படிப்புக்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கான “ரேண்டம்” எண் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான “ரேங்க்” பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணா மலையை சேர்ந்த மாணவர் தேவபிரசாத் முதலிடத்தை பிடித்துள்ளார், வேலூர் சிவகுமார் 2-வது இடம் பெற்றார் (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றுள்ளார்) திருச்சி கவுதம் 3 வது இடம் பெற்றார். (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் 2-வது இடம்) இவர்கள் உள்பட 32 பேர் 200க்கு 200 கட்-ஆப் மதிப் பெண் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு உயர் கல்வித்துறை செயலாளர் ஸ்ரீதர் இந்த ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் , பேராசிரியர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. பொது கவுன்சிலிங் 13-ந்தேதி தொடங்குகிறது. ரேங்க் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பித்த மாணவர்கள தங்கள் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment