உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும் சென்னைவாசிகளின் பொழுதுபோக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும்.
மாலை வேளைகளில் காற்று வாங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கடற்கரையில் இன்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணலில் ஏதே ஒன்று புதைந்திருந்ததை அந்த இளைஞர்கள் கண்டு பிடித்தனர்.
அது வித்தியாசமான பொருளாக இருக்கவே, மெரினா கடற்கரை போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் அது ராக்கெட் லாஞ்சர் கருவி என்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மெரினா கடற்கரை போலீசார், இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், அபாயகரமான ராக்கெட் லாஞ்சர் கருவி மக்கள் நடமாட்டம் மிகுந்த மெரினா கடற்கரைக்கு எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment