வரும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் தாமாகவே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலிலிருந்து விலக வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், அதிபருமான ஆசிப் அலி சர்தாரிக்கு லாகூர் உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இதுபற்றி தீர்ப்பு வெளியிட்ட தலைமை நீதிபதி உமர் அதா பந்தியால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'செப்டம்பர் 5-ம் தேதிக்குப் பின்னரும் அரசியலிலிருந்து விலகாவிட்டால் சர்தாரி பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது தீர்ப்பு பற்றி பேசிய நீதிபதி உமர், ‘நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புக்கு உட்பட்டது. சர்தாரி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய அவருக்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
ஜனாதிபதியாக இருக்கும் சர்தாரி அரசியலில் ஈடுபடக் கூடாது என, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை விசாரித்துள்ள லாகூர் உயர் நீதிமன்றம் சர்தாரிக்கு இரண்டாவது முறையாக தற்போது கெடு விதித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மே மாதத்தில், சர்தாரி அரசியலிலிருந்து விரைவில் விலக வேண்டுமென நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
No comments:
Post a Comment