ராஜபக்சேவுக்கு நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்ததுதான் நான் செயத மிகப் பெரிய தவறு என்று முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா புலம்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அதிபராக இருந்தபோது பிரதமராக இருந்த விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட எவ்வளவோ முயற்சி மேற்கொண்டேன். இருந்தும் அது கைகூட வில்லை.
எனவே, ராஜபக்சேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கினேன். அதுவே நான் செய்த மிகப்பெரிய தவறு. தற்போது அவர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார். அதற்கு அன்று நான் செய்த தவறே காரணம் என்று கூறியுள்ளார் சந்திரிகா.
ராஜபக்சே அமைச்சரவையில்இடம் பெற்றுள்ள அமைச்சரான ராஜித் சேனரத்னா சந்திரிகாவை சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினாராம் சந்திரிகா. சேனரத்னா மேலும் கூறுகையில், 2004-ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கலைத்ததே சந்திரிகா செய்த பெரிய தவறு என்றார்.
இப்போது புலம்பி என்ன பயன்...!
No comments:
Post a Comment