உலகப் புகழ்பெற்ற லண்டன் பிக் பென் கடிகாரத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் மகுடம் சூட்டி இந்த ஆண்டோடு அறுபது ஆண்டுகள் ஆகிறது.
இதை கொண்டாடும் விதமாகவும், ராணியை சிறப்பிக்கும் விதமாகவும் பிக்பென் கடிகாரம் 'எலிசபெத் டவர் கடிகாரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;
88 வயதாகும் எலிசபெத் ராணி மகுடம் சூட்டி,இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவரை சிறப்பிக்கும் விதமாக ஹவுஸ் ஆப் காமன்ஸ் எனப்படும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிக்பென் கடிகாரத்தின் பெயர் இனி எலிசபெத் டவர் கடிகாரம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை ஏகமனதாக வரவேற்று, ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி விரைவில் இப்பெயர் மாற்றம் குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிக் பென் டவர்
பிக் பென் டவர் என்பது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூண்டு ஆகும். நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.
இம்மணிக்கூண்டு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனத்தில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான்.
இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் பிரபல குத்துச் சண்டை வீரரான பென் கான்ட் என்பவரின் புனைப் பெயர் பிக் பென் ஆகும். அவரது நினைவாகவே இம்மணிக்கூண்டிற்கு 'பிக் பென்' என அக்காலத்தில் பெயரிடப்பட்டதாம்.
No comments:
Post a Comment