நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு நிதியமைச்சரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான பிரணாப் முகர்ஜிதான் காரணம் என தேசிய ஜனநாயாகக் கூட்டணி, அ.தி.மு.க, மற்றும் பிஜூ ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சங்மா தற்போது பிரணாப்புக்கு எதிராக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை போன்ற விவகாரங்களைக் கையில் எடுத்துள்ளார். இதுபற்றி பேசிய சங்மா, ‘ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து வருவதற்கு, ஊழல்தான் காரணம். விலைவாசி உயர்வு, ஊழல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மற்றும் கறுப்பு பணம் போன்ற பிரச்சினைகளுக்கு பிரதமரும், மத்திய அமைச்சரவையும்தான் காரணம். அதிலும் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சர்தான் இவையனைத்திற்கும் பொறுப்பு’ என்றார்.
நல்ல ஜனநாயகத்திற்கு விவாதங்கள் அவசியம் என்பதால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தன்னுடன் விவாதம் நடத்த வருமாறு பிரணாப்புக்கு கடந்த வாரம் சங்மா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சங்மாவின் அழைப்பைக் காங்கிரஸ் புறக்கணித்து விட்டது. தான் பழங்குடினத்தவர் என்பதாலும், வாக்காளர்கள் மனசாட்சி அடிப்படையில் வாக்களித்தாலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறலாம் என்பது சங்மாவின் கணிப்பு.
No comments:
Post a Comment