ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மும்பையில் இப்படத்தின் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் வெளிவர இருக்கும் இத்திரைப்படம் புதியதொரு பிரச்சினையை சந்தித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு எங்களுடைய படத்தின் தலைப்பை ஒட்டி இருக்கிறது. இதனால் எங்களது படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தயாரிப்பாளர் ஒருவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கள்ளத்துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் முருகேசன் என்பவர் இதுகுறித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனை விசாரித்த நீதிமன்றம் விஜயின் 'துப்பாக்கி' பட தலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment