கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற திடீர் குண்டு வெடிப்பில், 2 துப்பரவு தொழிலாளர்கள் காயமடைந்தார். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு அப்பகுதியில் பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பலத்த சத்தம் ஏற்பட்டதில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த குண்டு செயலழப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதாரங்களை கைப்பற்றினர். விசாரணையில் 2 துப்பரவு பணியாள் காயமடைந்ததாக தெரிய வந்தது.
இச்சம்பவம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டிற்கு வெளியே நடைபெற்றதாக தெரிகிறது. மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சரியா கூறியதாவது,
குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு துப்புறவு பணியாளருக்கு அதிக காயம் அடைந்து, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு துப்பரவு பணியாளருக்கு கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணையில் வெடிக்கும் தன்மை கொண்ட ஏதோ பொருள் மருத்துவமனை நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தாகவும், அதனை அப்புறப்படுத்த முயன்ற போது வெடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசாரும், வெடி குண்டு செயலிழப்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்.
இது குறித்து கொல்கத்தா மருத்துவ கல்லூரி முதல்வர் சித்தார்த் சக்கரவர்த்தி கூறியதாவது,
மருத்துவமனையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இங்கு பணியாற்றும் பணியாளர்களில் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டு வெடிப்பு சம்பவத்தால் மருத்துவப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment