1990-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சரப்ஜித் சிங் என்னும் இந்தியரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2008-ம் ஆண்டிலேயே சரப்ஜித் சிங் மரண தண்டனை பெற்றிருப்பார். பிரதமர் கிலானியின் தலையீட்டால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது 49 வயதாகும் சரப்ஜித் சிங் 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். ஆனால் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது சரப்ஜித் இந்தியாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தான் எல்லையருகே குடிபோதையில் அலைந்தபோது அவரை பாகிஸ்தான் தவறுதலாக கைது செய்ததாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சரப்ஜித் சிங் விரைவில் விடுதலை செய்யப்பட இருக்கிறார் என்று பாகிஸ்தானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டது. சரப்ஜித் சிங்கின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சகம் பிறப்பித்ததாகவும், அதுகுறித்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை அமைசகத்திற்கு அனுப்பியிருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இச்செய்தி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் சிறையிலிருந்து சுர்ஜீத் சிங் என்னும் இந்தியர்தான் விடுதலை செய்யப்படுகிறார் எனவும், அது சரப்ஜித் சிங் அல்ல எனவும், அந்நாட்டின் தலைமை செய்தித் தொடர்பாளர் பர்கதுல்லா பாபர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி பேசிய பர்கதுல்லா, ‘அது சரப்ஜித் சிங் அல்ல. சுச்சா சிங்கின் மகனான சுர்ஜீத் சிங்தான் அவர். சுர்ஜீத்தின் மரண தண்டனை 1989-ல் பெனாசிர் பூட்டோ பரிந்துரையின்பேரில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அவரது தண்டனைக் காலம் முடிந்ததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார்’ என்றார். பாகிஸ்தானில் சியா-உல்-ஹக்கின் ராணுவ ஆட்சியின்போது அந்நாட்டு எல்லையில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜீத், 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளார்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 20 வருடங்களாக சிறையிலிருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி காலில் சிஸ்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment