மருத்துவம், நர்சிங், பல் மருத்துவம், பார்மசி கவுன்சிலை கலைத்துவிட்டு மத்திய அரசால் நியமிக்கப்படும் 5 முழுநேர நியமன உறுப்பினர்களை கொண்ட தேசிய சுகாதார மனிதவள ஆணையம் ஒன்றை நிறுவும் மசோதவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வை எழுதி வெற்றி பெற்ற பின்பு தான் டாக்டராக பணிபுரிய முடியும் என்ற ஆணையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மேலும் மருத்துவ படிப்பு முடிந்ததும் மூன்றரை ஆண்டுகள் கிராமத்தில் கட்டாயப்பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இவை அனைத்துக்கும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி, தகுதி தேர்வு முறையை மாற்றி பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளை தரமுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் போலி மருத்துவர்களை ஒழிக்க தனி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை இழிவுபடுத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மருத்துவர்கள் போராட்டம் இன்று காலை தொடங்கியது. சென்னையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
எனினும், தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் அவசரப் பிரிவு மற்றும் உள் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. புற நோயாளிகள் சிகிச்சை இன்று அளிக்கப்பட மாட்டாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெறையா மக்கள் மரணத்திலிருந்து மீண்டார்கள்
ReplyDeleteமக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் கும்பலுக்கு இன்று விடுமுறை
ReplyDelete