கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி பரவியுள்ளது. இணைய தளங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இணைய தள செய்தியில் கூறி இருப்பதாவது:-
இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அமெரிக்காவில் உள்ள மோரிஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லுக்கும் இடையே காரில் சென்று கொண்டு இருந்தார். அந்த கார் அமிதாப்பச்சனின் நண்பருக்கு சொந்தமானதாகும். 95 கிலோ மீட்டர் வேகத்தில் அது சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
பல தடவை கார் உருண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த அமிதாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியானார். அவர் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அமிதாப்பச்சன் என போலீசார் உறுதி செய்தனர். இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த செய்தி சில நிமிடங்களிலேயே நூற்றுக் கணக்கான இணைய பக்கங்களில் பரவியது. அமிதாப்பச்சன் நலமாக இருக்கிறார் அவரைப் பற்றி வெளியான செய்திகள் வதந்திதான் என்று அமிதாப் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. இந்த வதந்தியால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.

No comments:
Post a Comment