பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரியின் இளைய மகன் சாரங். சாரங்கிற்கும், அவருடன் படித்த மதுரா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாக்பூர் மகல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மணமகன் சாரங், மணப்பெண் மதுராவின் கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நிதின் கட்காரி, அவருடைய மனைவி காஞ்சன், மணமகளின் தந்தை திலீப், அவருடைய மனைவி பிரதீமா ரோடி, கட்காரியின் மூத்த மகன் நிக்கின், அவரது மனைவி ரிதுஜா, இளைய மகள் கெட்கி ஆகியோர் வரவேற்றனர். கட்காரியின் மூத்த மகன் நிக்கின் திருமணம் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் ஆடம்பரமாக வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால் கட்காரி இளைய மகன் திருமணம் நேற்று எளிமையாக நடந்தது.
திருமண விழாவில் கர்நாடக முதல்-மந்திரி சதானந்த கவுடா, மத்திய மந்திரி பிரபுல் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி, எம்.ஜி.வைத்யா, சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே, நாக்பூர் மேயர் அனில் சோலே ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சாரங்-மதுரா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாக்பூரில் வரும் 26-ந் தேதியும், டெல்லியில் அடுத்த மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment