SIIMA விருதுகள் 2012 துபாயில் நடைபெற்றது. அவ்விழாவில் விக்ரம், சிம்பு, தனுஷ், சமீரா ரெட்டி, ஸ்ரேயா, அமலா பால், குஷ்பு என தமிழ் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது சிம்பு மற்றும் தனுஷ் தான். தனுஷிற்கு Sensation of South Indian Cinema என்னும் விருதினை வழங்கினார்கள்.
தனுஷ் விருதினை வாங்கியவுடன் 'கொலவெறி' பாடல் பாட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். உடனே தனுஷ் "பாடுறேன்.... என்னுடன் சேர்ந்து பாட இன்னொருவரையும் அழைக்கிறேன்" என்று கூற, வேறு யாரோதான் வர இருக்கிறார்கள் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் தனுஷ் "என்னுடன் சேர்ந்து பாட YOUNG SUPER STAR சிம்புவை மேடைக்கு அழைக்கிறேன். அவர் என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANCER" என்று சிம்புவிற்கு புகழாரம் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து சிம்பு மேடையேற, தனுஷ் "எல்லாரும் எங்களை எதிரிகள் என்று நினைக்கிறார்கள். ஆமாம் நாங்கள் எதிரிகள் தான். ஆனால் வெளியே, உள்ளுக்குள் நாங்கள் நண்பர்கள்" என்று இருவரும் தோள் மீது கைபோட்டு கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து 'கொலவெறி' பாடலை ஒன்றாகப் பாடினார்கள்.
இவர்களது நட்பையும், பாடியதையும் ஒருவர் கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார். அவர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ்!
No comments:
Post a Comment