நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பே பாடக்குழு கூடி அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை பரீசிலித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2012-13ம் கல்வியாணடில் முதலாம் பருவத்திற்கு பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக்கழக இணையதளத்தில் பாடத்திட்டம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் பாடத்தில் ஆண்டாளை தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாக பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னர் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகள் அனுப்பியதாகவும் சிறுகதை உள்ளது. மேலும் ஆபாச வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசும், உயர் கல்வித்துறையும் இந்த சர்சைக்குரிய பாடம் எப்படி இடம் பெற்றது என நெல்லை பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டன. இது மட்டுமல்லாது பல்வேறு தரப்பிடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதையடுத்து சர்சைக்குரிய பாடம் நீ்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment