இந்திய டென்னிஸ் கவர்ச்சி வீராங்கனை சானியா மிர்சா. லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட நேரடியாக தகுதி பெறவில்லை. வைல்டு கார்டு என்ற சிறப்பு சலுகை மூலம் ஒலிம்பிக்கில் விளையாட அவருக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதித்துள்ளது.
இதன் மூலம் அவர் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருஷ்மி சக்கரவர்த்தியுடன் இணைந்து விளையாடுகிறார். ஆண்கள் ஒற்றையர் போட்டியில் விளையாட இந்திய வீரர் சோம்தேவுக்கும் வைல்டு கார்டு மூலம் அனுமதி கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் லியாண்டர் பெயஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்று விட்டார். கலப்பு இரட்டையர் போட்டியில் சானியா மிர்சாவுடன் ஜோடி சேர லியாண்டர் பெயசை இந்திய டென்னிஸ் சங்கம் தேர்வு செய்து இருந்தது. ஆனால் லியாண்டர் பெயஸ் ஜூனியர் வீரர்களுடன் விளையாட அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
என்றாலும் வைல்டு கார்டு கிடைப்பதை பொறுத்து சானியாவுடன் விளையாடுவேன் என்றார். இப்போது சானியாவுக்கு வைல்டு கார்டு கிடைத்து விட்டதால் பெயஸ் அவருடன் இணைந்து விளையாடுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே வீரர்களை தேர்வு செய்வதில் குளறுபடி செய்துவிட்டதாக இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு சானியா மிர்சா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் போட்டியில் நான் மகேஷ் பூபதியுடன் விளையாட ஆர்வமாக இருந்தேன். என்றாலும் நாட்டின் நலன் கருதி லியாண்டர் பெயசுடன் விளையாட தயாராக இருக்கிறேன். அவருடன் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் இந்திய டென்னிஸ் சங்கம் வீரர்களை தேர்வு செய்வதில் என்னை கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்திக் கொண்டது. 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான நான் ஏமாற்றப்பட்டேன்.
இந்திய டென்னிஸ் வட்டாரத்தில் என்னை கவர்ச்சி பதுமையாக மாற்ற நினைப்பது எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுவரை என்னுடன் ஜோடி சேர்ந்து விளையாட எந்த ஆணுடனும் நான் மறுத்ததில்லை. யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டேன்.
ஆனால் அதுபோல் அவர்கள் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. இதுபோன்ற மனோநிலை நீடிப்பது கண்டனத்துக்கு உரியது. நம் நாட்டிலேயே மிக உயர்ந்த டென்னிஸ் அமைப்பில் இருந்து இதுபோன்ற நிலை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது.
ஆண்கள் ஒற்றையர் போட்டியில் 206-வது நிலை வீரரான விசுவர்த்தனுடன் பெயஸ் விளையாட சம்மதித்துள்ளார். ஆனால் பெயசின் தந்தை என்னிடம் மகனுடன் விளையாடுவது பற்றிய ஒப்பந்தத்தை எழுத்துப்பூர்வமாக கேட்கிறார். இதுபோல் என்னை நிர்ப்பந்திக்க முடியாது.
நான் இந்த நாட்டுக்காக விளையாடுகிறேன். மற்றவர்களுக்காக விளையாடவில்லை. நான் நாட்டு நலன் கருதி பெயசாக இருந்தாலும் பூபதியாக இருந்தாலும், போபண்ணா அல்லது சோம்தேவாக இருந்தாலும் யாருடனும் ஜோடி சேர்ந்து விளையாட தயங்கியது இல்லை. அதுபோன்ற பிரச்சினையை நான் எழுப்பியதே இல்லை. இந்தியாவுக்கு பதக்கம் வெல்வதிலேயே குறியாக இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment