நீளமான இணயத்தள முகவரியை பதுவு செய்து வைத்திருப்பதோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதோ சிரமமான விஷயம். ஒரு எழுத்தோ ஒரு குறியீடோ விடுப்பட்டால கூட சம்பந்தப்பட்ட இணையத்தளத்தை பார்க்க முடியாது. இணையத்தளம் உபயோகிபவர்களுக்கு எழும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இந்த பிரச்சனையை தீர்த்து எந்த அளவுக்கு நீளமான இணையத்தளமாக இருந்தாலும் அதனை சுருக்கி சிறியதாக்கி தருவதற்கு என்றே ஒரு இணையத்தளம் உள்ளது.
இந்த வசதி தேவைப்படுபவர்கள் இங்கு சென்று நமக்கு எந்த நீளமான முகவரியை சிறியதாக்க வேண்டுமோ அந்த முகவரியை கொடுத்தால் அவர்கள் அந்த இணையத்தள முகவரியை சிறியதாக்கி தருவார்கள். உதரணமாக http://vizhiyepesu.blogspot.com/2010/11/auuelouy-unyryy-pei-uaai.html என்ற இணையத்தள முகவரியை அளித்தோம் என்றால், அதனை பதிவாக வைத்துக் கொண்டு http://tinyurl.com/3ank9rn என்ற சிறிய சிறிய முகவரியை அளிப்பார்கள். 69 எழுத்துக்கள் இருந்த இந்த முகவரியை குறைத்து 26 எழுத்துகளாக மாற்றி தந்திருக்கிறார்கள். இந்த சிறிய முகவரியை டைப் செய்தாலே போதும் நாம் சம்பந்தப்பட்ட இணையத்தளத்திற்கு செல்லலாம். நீங்கள் இந்த இரண்டு லிங்க் -கையும் க்ளிக் செய்து பாருங்கள் உங்களுக்கே தெரிந்து விடும் .
இன்னும் இணையத்தள முகவரி நீளமாக இருக்கிறதே என்று கவலை பட தேவையில்லை தானே ?
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment