4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் 4 பேரை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மட்டும்தான் 4 வீரர்களை வைத்து கொண்டது. சென்னை அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்கல் ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தெண்டுல்கர், போலர்ட், மலிங்கா, ஹர்பஜன்சிங் ஆகியோர் நீட்டிக்கப்பட்டுள்ளனர். ஷேவாக் டெல்லி அணியிலும், வார்னே, வாட்சன் ராஜஸ்தான் அணியிலும், வீரட்கோலி பெங்களூர் அணியிலும் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.
4-வது ஐ.பி.எல். போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகளோடு கூடுதலாக புனே, கொச்சி அணி சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் 10 அணிகள் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது. மொத்தம் 416 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் லாரா ஏலப்பட்டியலில் இடம் பிடித்தார். ஓய்வு பெற்ற அவர் கடைசியாக விளையாடியது 2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் ஆகும். அதோடு அதிக பட்ச அடிப்படை விலையான ரூ.1.8 கோடிக்கு அவர் நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 6 விகிதத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அடிப்படை விலை ரூ.9 லட்சம். அதிக பட்ச அடிப்படை விலை ரூ.1.8 கோடி ஆகும்.
ரூ.1.8 கோடி அடிப்படை விலையில் லாரா உள்பட 18 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறை விளையாடிய கில்கிறிஸ்ட்டும் இதில் இடம் பெற்றுள்ளார்.
ரூ.1.8 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள்:-
ஆஸ்திரேலியா:- கில்கிறிஸ்ட், மார்ஷ், பெர்ட் லீ.
இங்கிலாந்து:- பீட்டர்சன், ஆண்டர்சன், சுவான், பிராட், லுகே ரைட், யார்டி.
இலங்கை:- தில்சான், ஜெயவர்த்தனே.
வெஸ்ட் இண்டீஸ்:- லாரா, கெய்ல்.
நியூசிலாந்து:- வெட்டோரி, ரோஸ் டெய்லர், பிரண்டன் மேக்குல்லம்.
தென் ஆப்பிரிக்கா:- சுமித், டிவில்லியர்ஸ்
No comments:
Post a Comment