ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விடவும் அதிகமாக ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் நடத்தப்பட்டாலும் அதன் எதிர்பார்ப்பு அதிகமாகுதே தவிர கொஞ்சமும் குறைய வில்லை. வருமானமும் சர்வதேச போட்டிகளை விட அதிகமாக கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் கிடைக்கிறது. பரிசுத்தொகையும் அதிகம் ஆதலால் வீரர்களும் இந்த போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கு கொள்ளும் வீரர்களை அந்தந்த அணியின் நிர்வாகத்தால் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஐபிஎல் சீசன் 4 அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதில் பங்கு கொள்வதற்கான வீரர்களை ஏலம் போடும் பனி விரைவில் நடக்க உள்ளது ஒவ்வொரு அணியும் வீரர்களை 4 தங்கள் அணியில் வைத்துகொள்ளலாம் அதன் படி பழைய வீரர்கள் யார் யாரை வைத்து கொள்ள போகிறோம் என்ற பட்டியலை ஒவ்வொரு அணியும் தயாரித்துள்ளன. இதில் மும்பை அணியில் சச்சின், பொல்லார்டு, மலிங்கா, ஹர்பஜன் ஆகியோர் நீடிக்கின்றனர். சென்னை அணியில் டோனி, ரெய்னா, முரளிவிஜய், மோர்க்கல் ஆகியோரும், பெங்களூர் அணியில் விராத்ஹோக்லி, டெல்லி அணியில் சேவாக், கொல்கத்தா அணியில் கெய்ல், ராஜஸ்தான் அணியில் வார்னே, வாட்சன் ஆகியோர் நீடிக்கின்றனர்
No comments:
Post a Comment